Lok Sabha Election | Tn Bjp | கோபிசெட்டிபாளையத்தில் தனது காரை சோதனை செய்த தேர்தல் அதிகாரிகளுக்கு திருப்பூர் பாஜக வேட்பாளர் முருகானந்தம் மிரட்டல் விடுத்ததாக புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் குன்னாத்தூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டர் எக்ஸில் மாவட்ட ஆட்சித் தலைவர், “இது தொடர்பாக குன்னத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
அதாவது, தேர்தல் பறக்கும் படையினரை மிரட்டியதாக திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த விவகாரத்தில் ஏ.பி. முருகானந்தம் சோதனைக்கு உடன்படவில்லை. காரை சாலையின் ஓரத்தில் நிறுத்தாமல், சாலை நடுவில் நிறுத்தினார் என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிகாரிகளை சோதனை செய்ய விடாமல் தடுத்தும் என்றும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த முருகானந்தம், “தேர்தல் பறக்கும் படையினருக்கு நான் முழு ஒத்துழைப்பு அளிக்கிறேன். என் பரப்புரையை முடக்கும் நோக்கத்தில் அடிக்கடி சோதனை செய்கின்றனர்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“