/indian-express-tamil/media/media_files/ptiy9PkhZnJdMzfz28NC.jpg)
விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார்.
Virudhunagar | Lok Sabha Election | Vijaya Prabhakaran | 17வது மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு, தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் தி.மு.க., இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொ.ம.தே.க, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க, புரட்சிப் பாரதம், புதிய தமிழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க., புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன.
இந்த நிலையில் விருதுநகர் மக்களவை தொகுதியில், அ.தி.மு.க. கூட்டணி சார்பில் விஜயகாந்த் மகன், விஜய பிரபாகரன் களம் காண்கிறார்.
இவரை ஆதரித்து மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மற்றொரு மகன் சண்முக பாண்டியன் விருதுநகர் தெப்பக்குளம் அருகில் பரப்புரை செய்தார்.
அப்போது உரிய அனுமதி இன்றி பரப்புரை செய்ததாக விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் சண்முக பாண்டியன், நடிகர் ராஜேந்திரன் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.