கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பாத்திமா நகரில் வசித்து வந்தவர் பெனடிக் ஆன்றோ. பாதிரியாரான இவர் மீது பேச்சிப்பாறை காவல் நிலையத்தில் 18 வயதாக நர்ஸிங் மாணவி ஒருவர் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில் ஆன்றோ தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதுடன் சமூக வலைதளங்கள் வாயிலாக மிரட்டலும் விடுத்தார் எனக் கூறியிருந்தார்.
இந்தப் புகாரை தொடர்ந்து பாதிரியார் பெனடிக் ஆன்றோ தலைமறைவானார். தொடர்ந்து அவரை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இதற்கிடையில் பாதிரியார் தொடர்பான ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல் பரவின. தொடர்ந்து பாதிரியார் ஆன்றோவும் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அவரை நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில் அவர் மீதான வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் தீவிரம் காட்டிவருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“