புதுச்சேரி பாகூரைச் சோ்ந்தவா் அஸ்வின். இவர், கோயில் திருவிழாவுக்காக தவில் மற்றும் நாதஸ்வரத்தை இணையதளத்தில் தேடியுள்ளார்.
அப்போது, குறிப்பிட்ட செயலியில் தவில் மேளம் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்டவருக்கு தவில், மேளத்துக்காக ரூ.22, 000 முன்பணமாக இணைய வழியில் அஸ்வின் அனுப்பினாா்.
இந்த நிலையில், குறிப்பிட்ட தேதியில் நாதஸ்வரம், மேளம் அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவா், புதுச்சேரி கோரிமேடு பகுதியில் உள்ள இணையவழிக் குற்றப்பிரிவு போலீஸில் புகாரளித்தாா்.
விசாரணையில், சென்னை கொரட்டூரைச் சோ்ந்த ஜெயக்குமாா் (52) மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை இணையவழிக் குற்றப்பிரிவு ஆய்வாளா்கள் தியாகராஜன்,கீா்த்தி ஆகியோா் கைது செய்தனர்.
கைதான ஜெயக்குமாா், மேலும் 7 பேரை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. தொடா்ந்து, அவரிடமிருந்த 30-க்கும் மேற்பட்ட வங்கி புத்தகங்கள், காசோலைகள், 20 கைப்பேசி சிம் காா்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“