நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார்நகர் கிராம மீனவர்கள் கரை ஒதுங்கிய சிலிண்டர் ஒன்றை கைப்பற்றினர். இந்த சிலிண்டரில் சீன எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
Advertisment
இது தொடர்பாக அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் க்யூ பிரிவு மற்றும் இந்திய கடலோர காவல்படையினர் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கைப்பற்றப்பட்ட சிலிண்டர் 3 அடியும், 30 கிலோ எடையும் கொண்டது. இந்தச் சிலிண்டர் கப்பலில் இருந்து தவறி விழுந்ததா? அல்லது கடலில் வீசப்பட்டதா என்பன போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றுவருகிறது.
சீனா மீது உலக நாடுகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன.குறிப்பாக, தங்கள் நாட்டு வான்வெளியில் பலூன்களை நிறுத்தி சீனா உளவு பார்ப்பதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் இந்தப் பலூன்களும் அண்மையில் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த சீனா, அந்தப் பலூன்கள் வானியலை அறிய நிறுத்தப்பட்டன, அவை உளவு பலூன்கள் இல்லை எனக் கூறியுள்ளது. இதற்கிடையில், பலூன்கள் மூலம் உளவு பார்ப்பது 200 ஆண்டுகளுக்கு முந்தைய தொழில்நுட்பம். சில நேரங்களில் குறிப்பிட்ட இடத்தில் பலூனை வெடிக்கவும் செய்யலாம் எனவும் கூறினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/