Advertisment

அரசு பணியாளர்களின் குழந்தைகளை கவனிக்க குழந்தைகள் காப்பகம்: கோவையில் திறப்பு

அரசு பணியாளர்களின் குழந்தைகளை கவனிக்க குழந்தைகள் காப்பகம் கோவையில் திறக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
A day care center has been opened in Coimbatore to look after the children of government employees

தமிழகத்தில் முதல்முறையாக அரசு பணியாளர்களின் குழந்தைகளை கவனிக்க குழந்தைகள் காப்பகம் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல் முறையாக அரசு ஊழியர்களின் குழந்தைகளை கவனிப்பதற்கான சிறப்பு குழந்தைகள் காப்பகம் கோவையல் திறக்கப்பட்டுள்ளது.

கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு பணிக்கு வரும் ஊழியர்களின் குழந்தைகளை கவனிப்பதற்காக இக்காப்பகம் திறக்கப்பட்டுள்ளது.

Advertisment

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள இந்த குழந்தைகள் காப்பகத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி துவங்கி வைத்துள்ளார்.

4 அங்கன்வாடி ஊழியர்கள், ஒரு தனியார் ஆசிரியர் குழந்தைகளை கவனித்துக்கொள்ள நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த காப்பகத்தில் 7 வயதிற்குள் உள்ள குழந்தைகள் அனுமதிக்கப்படுகின்றனர். இங்கு விளையாட்டு, உடற்பயிற்சி, மற்றும் குழந்தைகளுக்கான பாடல்களை ஒளிப்பரப்ப தொலைக்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் விளையாடும் குழந்தைகள் கிழே விழுந்தாலும் அடிபடாமல் இருந்த மேட் போடப்பட்டுள்ளது. பெற்றோர் கொடுத்துச்செல்லும் உணவுகள் மட்டுமின்றி சத்து மாவு மற்றும் சத்து நிறைந்த சிற்றுண்டிகள் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

தினமும் அரசு ஊழியர்களின் பணி நேரங்களில் இந்த காப்பகம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 7 வயதிற்கு உள்பட்ட பள்ளிகளுக்கு செல்லும் அரசு ஊழியர்களின் குழந்தைகளும் மாலை நேரத்தில் காப்பகங்களில் கவனித்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செய்தியாளர் பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment