சென்னை கரையோரம் இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலம்

சென்னை நீலாங்கரை அருகே இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியதால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

நீலாங்கரை அடுத்த கானத்தூர் மீனவர் பகுதி கடற்கரையில் 20 அடி நீளம் கொண்ட திமிங்கலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இத்திமிங்கலம் அழுகிய நிலையில் இருந்ததால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. இது குறித்து மீனவர்கள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், திமிங்கலத்தின் உடலை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

நீலாங்கரை : கரை ஒதுங்கிய திமிங்கலம்

கடற்கரையில் பெரிய மீன் இறந்து கரை ஒதுங்கியுள்ளதாக தகவல் பரவியதால் அப்பகுதியை சேர்ந்த மக்களும் மீனவர்களும் இதனை காண விரைந்தனர். இதுகுறித்து அறிந்ததும் கானத்தூர் போலீசாரும் வனத்துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

அப்போது கடற்கரையில் ஒதுங்கியது டால்பின் வைகையை சேர்ந்த திமிங்கலம் என்று தெரியவந்தது. இது, 16 அடி நீளமும் 6 அடி அகலமும் இருந்தது. அதிகாரிகள் வந்து ஆய்வு செய்த பிறகுதான் எந்தவகை திமிங்கலம் என்பது தெரியவரும். இந்த மீனை பார்வையிட ஏராளமான மக்கள் குவிந்ததால் பரபரப்பு காணப்பட்டது. மீன் உடலை கைப்பற்றிய அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

மேலும் இது குறித்து ஆய்வு நடத்திய அதிகாரகள் கூறுகையில், “மீனவர்கள் படகு இதனை இழுத்து கொண்டு வந்திருக்க வாய்ப்பில்லை. இது போன்ற மீன்களை மீனவர்கள் பிடிக்கவும் மாட்டார்கள். ஏனென்றால் இதற்கு அதிக டீசல் தேவைப்படும் மேலும் இதனை யாரும் வாங்க மாட்டார்கள். ஆய்வு முழுமையாக நடந்த பிறகே மீன் இறந்த காரணம் தெரியவரும்” என்றார்.

சமீப காலமாக சிறு அளவு திமிங்கலங்களான பாட்டில் நோஸ், சாதா, கூனல் முதுகு போன்ற திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கும் நிலை இருந்து வருகிறது. தற்போது பெரிய உயிரினமான அதுவும், அழிந்து வரும் நிலையில் காணப்படும் வகையினை சேர்ந்ததுமான நீலத்திமிங்கலம் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியிருப்பது சுற்று சூழல் ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close