கோவையை அடுத்த கணபதி பகுதியை சேர்ந்தவர் பாபு(45). மாற்றுத்திறனாளியான இவர் கடந்த சில மாதங்களாக சிறுநீர் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்.
இதனையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று மருத்துவரிடம் கேட்டுக் கொண்டார்.
ஆனால் அவர்கள் ஸ்கேன் செய்ய முன்பதிவு செய்த பின் சில நாட்கள் ஆகும் என கூறியதாக தெரிகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த பாபு இன்று காலை கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் விவரத்தை கேட்டு அறிந்து பேச்சு வார்த்தை செய்தனர்.
தொடர்ந்து அவர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டார்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“