கன்னியாகுமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு முதல் கட்டமாக 70,000 விண்ணப்பங்கள் வந்தன. இரண்டாவது கட்டமாக ஒரு லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்பங்கள் என 2 லட்சத்து 10 ஆயிரம் விண்ணப்பங்களை கள ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவின் பேரில் அதிகாரிகள் நேரடியாக வீட்டிற்கு சென்று கள ஆய்வு பணியை மேற்கொண்டனர். இந்த கள ஆய்வு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
முன்னதாக, மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் 784 ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்பட்டது.
4 லட்சத்து 19 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்கள் விண்ணப்ப படிவுகளை பூர்த்தி செய்து வழங்கி உள்ளார்கள். ஒரு லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் விண்ணப்ப படிவங்களை பூர்த்திசெய்து வழங்கவில்லை.
பூர்த்தி செய்து வழங்கப்பட்ட 4 லட்சத்து 19 ஆயிரம் விண்ணப்ப படிவங்களும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 20 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதேபோல் மற்ற மாவட்டங்களிலும் விண்ணப்பங்கள் சேகரிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“