கோவை கணபதி காமாட்சி அம்மன் கோவில் எதிர்புறம் உள்ள செல்போன் டவரில் போதை ஆசாமி ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
அவரை கீழே இறங்குமாறு தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர். எனினும், கடும் போதை தலைக்கு ஏறிய நிலையில், அந்த ஆசாமி செல்போன் டவர் உச்சியில் நின்று கீழே குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.
-
செல்போன் கோபுரத்தில் உச்சியில் இருக்கும் போதை ஆசாமி
அதேபோல டவரில் உள்ள கம்பிகளை புடுங்கி கீழே வீசினார். இதனால், அந்த பகுதியில் உள்ள செல்போன் இணைப்பு துண்டிக்கப்படும் அபாயம் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக தமிழக முழுவதும் உள்ள அனைத்து செல்போன் டவர் களிலும் கீழே இருந்து மேலே ஏறி செல்லாத முறையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை செய்தியாளர் பி.ரஹ்மான்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil