Advertisment

5 ஆடுகளின் சாவுக்கு நீதி கிடைக்குமா? கலெக்டர் ஆபிஸில் ஒலிபெருக்கியுடன் விவசாயி தர்ணா.!

விவசாயின் 5 ஆடுகள் 2019இல் கொல்லப்பட்டுள்ளன.

author-image
WebDesk
Aug 22, 2022 21:29 IST
New Update
Former protest in Covai district office

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி தர்ணா போராட்டம்

கோவை வேடபட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். கடந்த 2019ஆம் ஆண்டு இவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் மூன்று பேர் (செந்தில், பாண்டியன், பழனிச்சாமி) இவர் வளர்த்து வந்த ஐந்து ஆடுகளை விஷம் வைத்துக் கொன்றதாக கூறப்படுகிறது.

Advertisment

இது குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வடவள்ளி காவல் நிலையம் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்த போதிலும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒலிபெருக்கியுடன் இன்று தர்ணாவில் ஈடுபட்டார்.

உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரிடம் இருந்த ஒலிபெருக்கியை பறிமுதல் செய்தனர். அப்பொழுது அவர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் மனு அளிக்க காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். ஒலிபெருக்கியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட நபரால் சிறிது நேரம் பதட்டமான சூழல் நிலவியது.

செய்தியாளர் ரஹ்மான்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment