தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் செ . சைலேந்திரபாபு நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
முன்னதாக அவர், “திருநெல்வேலி சரகம் , கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய காவல் நிலைய கட்டடங்களை திறந்து வைத்தும் , திருநெல்வேலி சரகத்திற்குள்பட்ட தூத்துக்குடி , திருநெல்வேலி , தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆய்வும் செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர், “கன்னியாகுமரி மாவட்டத்தில் குட்கா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதனில் சம்பந்தப்பட்டுள்ள 27 பேர் கைது செய்யப்பட்டும் , அவர்களிடமிருந்து ரூபாய் 6,02,804 மதிப்புள்ள 603 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளில் குற்றவாளிகள் பயன்படுத்திய 04 இருசக்கர வாகனங்களும் மற்றும் 02 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் ஈடுபட்ட ரவுடிகள் 79 பேர் கைது செய்யப்பட்டும் , 16 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்திலும் சிறையிலடைக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் 552 பேரிடம் நன்னடத்தை பிணைப்பத்திரம் பெறப்பட்டுள்ளது” என்றார். முன்னதாக இன்றைய தினம் காலை கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குளச்சல் உட்கோட்ட முகாம் அலுவலகம், தக்கலை மதுவிலக்கு காவல் நிலையம், கொற்றிகோடு காவல் நிலையம், ஆகியவற்றை திறந்து வைத்தார்.
அதன்பின்னர் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து நடைபெற்ற தோல்பாவை கூத்து, ஜிம்னாஸ்டிக், நிகழ்ச்சிகள், சுமார் 1500 மாணவர்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காவல்துறை உட்கோட்டத்துக்கிடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
பெண்களள் பாதுகாப்பு செயலி குறித்து பேசுகையில், “தமிழகத்தில் பெண்களுக்கு என்று ஒரு தனி ஆஃப் உருவாக்கப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பு என உங்கள் கை பேசியில் பதிவு கொள்ளுங்கள்.
ஏதாவது பாதுகாப்பு பெண்களுக்கு தேவை என்றால் அந்த ஆஃப்யை தொட்டால் உரிய அலுவலகத்திற்கு அந்த தகவல் சென்றுவிடும்.
அதன் மூலம் பெண்கள் உரிய பாதுகாப்பை பெறமுடியும் எனத் தெரிவித்தார். அப்போது, கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடன் இருந்தனர்.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.