Advertisment

கோயம்புத்தூர் தனியார் கல்லூரியில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் இயங்கிவரும் ஜான்சன் தொழில்நுட்பக் கல்லூரியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.

author-image
WebDesk
New Update
Coimbatore Johnson Technical College fire accident

அன்னூர், அவிநாசி மற்றும் சூலூர் தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

Coimbatore private college fire |  கோயம்புத்தூர் கருமத்தம்பட்டி பகுதியில் இயங்கிவரும் ஜான்சன் தொழில்நுட்பக் கல்லூரியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்து காரணமாக கல்லூரி வளாகத்தில் உள்ள  ஆடிட்டோரியத்தில் பிற்பகலில் கரும்புகை வெளியேறியது.
உடனடியாக கல்லூரி வளாகத்தில் இருந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அன்னூர், அவிநாசி மற்றும் சூலூர் தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
சம்பவ இடத்திற்கு வந்துள்ள கருமத்தம்பட்டி போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார்கள். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆடிட்டோரியத்துக்குள் சென்ற மூன்று பேரின் நிலை குறித்து தகவல் தற்போது வரை வெளியாகாத நிலையில் விபத்தில் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்தும் முழுமையான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
செய்தியாளர் பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment