முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி உட்பட 7 பேர் சிறையில் இருந்து விடுதலை செய்யும் தீர்மானம் கடந்த 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள நிலையில், சி.பி.ஐ அமைப்பின் பன்னோக்கு விசாரணை ஆணையத்தின் (multi-disciplinary monitoring agency ) இறுதி அறிக்கைக்காக காத்திருப்பதால் 7 பேர் விடுதலை பற்றி முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஆளுநரின் செயலர் உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார்.
முன்னதாக, ஏகப்பட்ட சிறைக் கைதிகளிடம் கொரோனா பெருந்தொற்று கண்டரியப்படும் சூழலில், பல்வேறு உடல் ஆபத்துகள் கொண்ட பேரறிவாளனை 90 நாட்கள் பரோலில் விடுவிக்க வேண்டும் என்று பேரரிவாளனின் தயார் அற்புதம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார் .
இந்த வழக்கு கடந்த 22ம் தேதி விசாரணைக்கு வந்த போது," உடல் நலம் சரியில்லாததாலும், அவரது சகோதரி மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவும் கடந்த ஆண்டு நவமபர் மாதம் சிறைத்துறை அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியது. கடந்த 2017-ம் ஆண்டு, பேரறிவாளன் 60 நாட்கள் பரோலில் விடுவிக்கப்பட்டார். சிறை விதிகளின் படி, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பரோல் அனுமதிக்கப்படுவதால், பேரறிவாளனுக்கு தற்போது பரோல் வழங்க முடியாது" என்று தெரிவித்தார்.
பேரறிவாளன் தரப்பில் ஆஜரான வக்கீல், “பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் தீர்மானம் கொன்ப்டு வந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக, இந்த தீர்மானம் கவர்னரின் பரிசீலனையில் உள்ளது. எனவே, மனுதாருக்கு பரோல் வழங்க தமிழக அரசு இரண்டு ஆண்டுகள் காத்திருக்கு வேண்டிய அவசியம் இல்லை. 90 நாட்கள் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டார்.
இதையடுத்து, “7 பேர் விடுதலை தொடர்பாகவும், பேரறிவாளனுக்கு ‘பரோல்’ வழங்குவது தொடர்பாகவும் தமிழக அரசு ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது,சி.பி.ஐ அமைப்பின் பன்னோக்கு விசாரணை ஆணையத்தின் (multi-disciplinary monitoring agency ) இறுதி அறிக்கைக்காக காத்திருப்பதால் 7 பேர் விடுதலை பற்றி முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஆளுநரின் செயலர் கடிதம் அளித்ததாக தமிழக அரசு நீதிபதிகளிடம் தெரிவித்தது.
பேரறிவாளனின் பரோல் தொடர்பாக முடுவேடுக்க ஏன் இத்தனை கால தாமதம் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், " பரோல் மனுவை உரிய நேரட்த்தில் பரிசீலிக்காததால் சிறைத்துறைக்கு ஏன் அபராதம் விதிக்கக் கூடாது" என்று கேட்டனர்.
பரோல் தொடர்பாக 3-ம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamilt.me/ietamil