scorecardresearch

கோவை அருகே பழங்குடியின மக்களுக்கு புதிய வீடுகள்: பல ஆண்டு கனவு நிறைவேறியதாக மகிழ்ச்சி

கோவை அருகே பழங்குடியினருக்கு குடியிருக்க வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது.

A house was built for the tribals near Coimbatore
ஜோஸ்வா என்ற பழங்குடிகள் நல செயற்பாட்டாளர், அரசின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று, அதிமுக ஆட்சியில் முதற்கட்டமாக 5 வீடுகள் கட்டிக் கொடுத்தார்.

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி மலைப்பகுதி 24 வீரபாண்டி ஊராட்சிக்கு உள்பட்ட கண்டிவழி எனும் மலை கிராமத்தில் 15 குடும்பங்கள் மட்டுமே உள்ளன.
இந்தக் குக்கிராமத்தில் சாலை, தண்ணீர், மின்சாரம் ஆகிய வசதிகள் இருந்த போதும், பல ஆண்டுகளாக வீடுகள் மோசமான நிலையில் இருந்து வருகிறது. இதனால் அக்கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகுகின்றனர்.

இந்நிலையில் ஜோஸ்வா என்ற பழங்குடிகள் நல செயற்பாட்டாளர், அரசின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று, அதிமுக ஆட்சியில் முதற்கட்டமாக 5 வீடுகள் கட்டிக் கொடுத்தார்.

பின்னர் மற்ற பழங்குடி குடும்பங்களும் தங்களுக்கும் வீடுகள் கட்டித்தர உதவ வேண்டுமென ஜோஸ்வாவிடம் வலியுறுத்தியதன் பேரில் இரண்டாவது கட்டமாக 7 வீடுகள் கட்ட ஏற்பாடுகள் நடைபெற்று தமிழ்நாடு அரசு பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் அரசு சார்பில் 3 இலட்ச ரூபாய் வழங்கப்பட்டு அந்த நிதி போதுமான இல்லாத நிலையில், புராபெல் மற்றும் ராக் என்ற நிறுவனத்தின் உதவியுடன் கட்டுமான பணிகள் முழுமையாக முடிவுற்றன.

இப்பணிகள் முடிவுற்ற 6 வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி இன்று அந்த கிராமத்தில் நடைபெற்றது. இதில் புராபெல் வித்யா செந்தில்குமார் , ராக் நிறுவன தலைவர் பாலசுந்தரம், மருத்துவர் மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு வீடுகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

இது குறித்து கண்டிவழி கிராம மக்கள் கூறுகையில், “பல ஆண்டுகள் நல்ல வீடுகள் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்த நிலையில் ஜோஸ்வா மிகவும் கஷ்டப்பட்டு அரசு மற்றும் தனியார் உதவியுடன் வீடு கட்டி தந்துள்ளார் எனவும் தற்போது கட்டப்பட்டு வீடு நன்றாக உள்ளது எனவும் இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் தெரிவித்தனர். இதற்கு காரணமான ஜோஸ்வாவிற்கு நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.

செய்தியாளர் பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: A house was built for the tribals near coimbatore