தேசிய தலைநகர் டெல்லியில் 2024ஆம் ஆண்டு பிப்.15ஆம் தேதி 50 கிலோ போதைப் பொருள் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில், தமிழ்நாட்டை சேர்ந்த முகேஷ், ரகுமான், அசோக் குமார் என்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளாக போதைப் பொருள் கடத்தி வந்தது தெரியவந்தது.
மேலும், இந்தக் கடத்தலில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. ஜாபர் சாதிக் தி.மு.க-வில் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்தார் ஆவார்.
இதையடுத்து அவர் அண்மையில் தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2500 கோடி மதிப்பில் போதைப் பொருள் விற்பனை செய்ததும் உறுதியானது.
இதற்கிடையில், ஜாபர் சாதிக் தலைமறைவானார். இவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க, ஜாபர் சாதிக்குக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“