சென்னை மெட்ரோ ரயில் 2வது கட்ட திட்டத்தில் கலங்கரை விளக்கம் - போட் கிளப் வரை சுரங்கம் அமைக்கும் பணி இன்று (ஜன.18,2024) தொடங்கப்பட்டது.
இந்த இயந்திரத்துக்கு ‘கழுகு’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம், 2026 அக்டோபரில் போட் கிளப் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து வெளியான செய்திக் குறிப்பில், “மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம்-2 வழித்தடம் 4ல் மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்தில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கபாதை கட்டுமானப் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.
ஃபிளம்மிங்கோ எனப் பெயரிடப்பட்ட முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரம் கலங்கரை விளக்கத்தில் இருந்து போர்ட் கிளப் வரை சுரங்கம் அமைக்கும் பணிகள் செய்துவருகிறது.
கழுகு எனப் பெயரிடப்பட்ட மற்றொரு இயந்திரம் கலங்கரை விளக்கம் ரயில் நிலையத்தில் இருந்து திருமயிலை நோக்கி வெற்றிகரமாக சுரங்கம் தோண்டும் பணியை செய்துவருகிறது. இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் அக்.2026இல் போட் கிளப் நிலையத்தை வந்தடையும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“