மும்பையின் ஜூஹு, ஒன்8 கம்யூனில் உள்ள விராட் கோலியின் உணவகங்களில் ஒன்றில் தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி, வேஷ்டி அணிந்த ஒரு நபர் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறார்.
மேலும் அதில் இதற்கு காரணம் ஆடைதான் எனவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார். 1 மில்லியனுக்கும் (10 லட்சம்) அதிகமான பார்வைகளைப் பெற்ற வீடியோ யாருடையது என்பது இதுவரை வெளியாகவில்லை.
அந்த வீடியோவில் ஹோட்டலில் செக்-இன் போது தனக்கு அனுமதி மறுக்கப்பட்டு எனத் தெரிவித்துள்ளார். மேலும், அவர் தனது ஆடை காரணமாக உணவகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்று கூறினார். அவரது ஆடை உணவகத்தின் ஆடைக் குறியீட்டின்படி இல்லாததால் அவரை உணவகத்திற்குள் நுழைய விடாமல் ஊழியர்கள் தடுத்ததாகக் கூறப்படுகிறது.
வீடியோவில் தோன்றும் நபர் வெள்ளை சட்டை மற்றும் வேஷ்டி அணிந்துள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தி உள்ளது.
இது கலாச்சாரத்திற்கு எதிரானது அல்ல என்று சிலர் கருத்து தெரிவித்தாலும், உணவகத்தால் குறிப்பிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட ஆடைக் குறியீட்டை மட்டுமே இது குறிக்கிறது என்றும் சிலர் கூறிவருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“