/indian-express-tamil/media/media_files/dtWhFJSC8uYkqLgFq06O.jpg)
திருச்சியில் சர்வதேச மனநல தினத்தை முன்னிட்டு மனநல விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
A mental health awareness rally in Trichy: திருச்சி மாவட்ட மனநல திட்ட இணை இயக்குனரகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் ஸ்ரீ மனநல பராமரிப்பு மையத்தின் சார்பில் சர்வதேச மனநல தினத்தை முன்னிட்டு மனநல விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இப்பேரணியை ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மனநல விழிப்புணர்வு மற்றும் மனநலம் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்த உறுதிமொழியை 50-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ , மாணவிகள் ஏற்றுக் கொண்டனர்.
பேரணியில் பங்கேற்றவர்கள் கைகளில் மனநல விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் நீல நிற பலூன்களை ஏந்தியபடி சென்றனர். இந்தப் பேரணி, மேஜர் சரவணன் நினைவுத்தூண் பகுதியில் முடிவடைந்தது.
முன்னதாக, மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
குறிப்பாக பாதிப்பு ஏற்படும் இடங்களை கண்டறிந்து, அங்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி உள்ளதுடன், மாவட்டம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 வயது குழந்தை வெளிமாவட்டத்தில் இருந்து வந்தவர் ஆவார்.
நான்கு வயது குழந்தை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளில் டெங்கு காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது” என்றார்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.