புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வரும் அக்டோபர் 20-ஆம் தேதி வடக்கு அந்தமான் கடற்பகுதியில் ஒரு புதிய மேல் அடுக்கு காற்று சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் தாக்கத்தால், மத்திய வங்கக்கடலில் அக்டோபர் 22-ஆம் தேதியன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின், அது வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில், வடக்கு ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்க பகுதியை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நகரும் போது தமிழகத்தில் மேற்கு காற்றின் காரணமாக 23 மற்றும் 24 ஆகிய தேதிகளிலும் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தீபாவளி வரை அவ்வப்போது தமிழகத்தில் மழை இருந்து கொண்டே இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
எனினும், மழை குறித்து கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“