கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன் வினியோகம் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது.
தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் கடை பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று, மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன்களை விநியோகம் செய்தனர்.
இதற்கிடையில், திட்டத்தில் பயன்பெற, பேங்க் ஸ்டேட்மெண்ட் உள்பட 4 ஆவணங்கள் தேவை என்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில், 2002-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதிக்கு முன் பிறந்த 21 வயது நிரம்பியவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
நகர்புற பகுதிகளுக்கு டோக்கன், விண்ணப்பம்
வழங்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், விண்ணப்பங்கள், டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டதில் காணப்பட்ட குறைபாடுகளை
களைந்து தலைமைச் செயலாளர் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“