அமைச்சர் செந்தில் பாலாஜியை, சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்தது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில்ப பாலாஜிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், பைபாஸ் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி மனைவி மேகலா அளித்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத்துறை இணை இயக்குனருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனைவி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “தனது தரப்பை கேட்ட பிறகே அமலாக்கத் துறையின் மேல்முறையீடு மனு மீது உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இதற்கிடையில், அமைச்சர் செந்தில்பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றியதை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த மனுக்கள் புதன்கிழமை (ஜூன் 21) விசாரணைக்கு வருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“