புனித ரமலானை முன்னிட்டு இஸ்லாமியர்கள் நாடு முழுக்க இன்று தொழுகை மற்றும் ஈகை பணிகளில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள அஸ்தினாபுரம் மசூதியில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக வாக்குவாதம் முற்றிய நிலையில், மசூதி செயலாளர் தள்ளிவிட்டதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
ரம்ஜான் தினத்தில் மசூதியில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில் ஏதேனும் முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“