Advertisment

காகிதம் சேகரித்தவருக்கு அரசு மருத்துவமனையில் வேலை; மா.சுப்பிரமணியன் நடவடிக்கை

சென்னையில் தெரு ஓரங்களில் காகிதம் சேகரித்து குடும்பம் நடத்திவந்த ஒருவருக்கு மா.சுப்பிரமணியன் நடவடிக்கையால் அரசு மருத்துவமனையில் ரூ.12 ஆயிரத்தில் வேலை கிடைத்துள்ளது.

author-image
WebDesk
New Update
A person who was collecting paper in Chennai got a job in a government hospital due to Mr Subramanians action

சென்னையில் காகிதம் பொறுக்கியவருக்கு மா.சுப்பிரமணியன் ரூ.12 ஆயிரம் மாத சம்பளத்தில் வேலை வாங்கி கொடுத்தார். (புகைப்பட உதவி: நன்றி புதிய தலைமுறை)

தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சென்னை கிண்டியில் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கு தெரு ஓரங்களில் காகிதம் எடுத்துக்கொண்ட நபர் ஒருவரை சந்தித்தார்.

அப்போது அவரிடம் விசாரித்த போது, வேறு வேலை கிடைக்காததால் இந்த வேலையை அவர் செய்வது தெரியவந்தது. இதையடுத்து அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று அவருக்கு உண்ண உணவு, உடுத்த உடை ஆகியவற்றை வழங்கினார்.

தொடர்ந்து, அவருக்கு அரசு மருத்துவமனை ஒன்றில் மாதம் ரூ.12ஆயிரம் சம்பளத்தில் தற்காலிக வேலையில் சேர்த்துவிட்டார். மா.சுப்பிரமணியனின் இந்த மனிதநேய நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் ஆதரவு கிடைத்துள்ளது.

இது தொடர்பான வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துவருகின்றனர்.

Advertisment

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Ma Subramanian
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment