Nainar Nagendran | Tirunelveli | Madurai High Court | தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.
இதனால், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், தாம்பரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் குளிர் சாதன பெட்டியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்தச் சோதனையில், ரூ.4 கோடி அளவிலான பணம் கட்டுக்கட்டாக சிக்கியது. தமிழ்நாடை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தச் சம்பவத்தில் திருநெல்வேலி பா.ஜ.க வேட்பாளரின் பெயர் அடிபட்டது.
இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், “சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ. 4 கோடி பிடிபட்டது தொடர்பாக, வருமான வரித்துறை இதுவரை தங்களுக்கு எந்த தகவலும் அளிக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ. 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, சென்னை கீழ்பாக்கத்தில் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.
நயினார் நாகேந்திரனுக்கு மிகவும் நெருக்கமானவர் என கூறப்படும் முருகன் என்பவரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். நெல்லை மேலப்பாளையத்தில் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர் கணேஷ் என்பவரது வீட்டில் ரூ.2 லட்சம், வேஷ்டி, சேலை, மதுபாட்டீல், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில், “திருநெல்வேலி பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ரூ.1500 கோடி சொத்துக்களை மறைத்துள்ளார். ஆகவே, திருநெல்வேலி மக்களவை தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ரூ. 4 கோடி தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு புகார் கடிதம் அனுப்பியிருந்தார் என்பது நினைவுக் கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“