Advertisment

மதுக் கடைகளை மூடிவிட்டு, கள்ளுக் கடையை திறங்கள்: நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடிவிட்டு கள்ளுக் கடைகளை திறக்க வேண்டும் என வலியுறுத்தி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
A protest was held in Nagercoil to close down liquor shops and open Palm wine

நாகர்கோவிலில் மதுக்கடைகளை மூடிவிட்டு கள்ளுக்கடையை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மதுக்கடைக்கு எதிராகவும், கள்ளுக்கடைக்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு எழுத்தாளர் இயக்க தலைவர் வழக்கறிஞர் திருத்தமிழ் தேவனார் தலைமை தாங்கினார். இதில், பல்வேறு சமுக அமைப்புகளான விவசாய தொழிலாளர்கள் நல சங்கம், தமிழ்நாடு தமிழ் சங்கம், பெண்ணீய அமைப்பினர் பங்கேற்றனர்.

Advertisment

ஆர்ப்பாட்டத்தின்போது மதுக்கடைகளின் தீமைகள், உடலுக்கு தீங்கிழைவிக்காத கள் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் மீன் மற்றும் அவித்த மரச்சீனி கிழக்கு பரிமாறப்பட்டது.

கள்ளுக்கு ஆதரவான போராட்டம் கோவை, சென்னை போன்ற பெருநகரங்களிலும் நடக்கிறது. தற்போது நாகர்கோவிலிலும் இதற்கு ஆதரவாக குரல்கள் எழுந்துள்ளன.

செய்தியாளர் த.இ. தாகூர்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nagercoil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment