தமிழ்நாடு எஸ்சி., எஸ்டி ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்தவும், எஸ்சி, எஸ்டி பதிப்பாளர்களுக்கு ஸ்டால்கள் ஒதுக்கப்படுவதை உறுதி செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி புத்தக பதிப்பாளர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
எழுச்சி பதிபகத்தின் பிரதீப்,சென்னை புத்தகக் காட்சியை நடத்தும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்களுக்கு அவர் அளித்த விண்ணப்பம் பெறப்படவில்லை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வெளிப்படையான கொள்கைகளை பபாசி கடைபிடிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசு ஜூலை 25 தேதியிட்ட அரசாணையின் மூலம் சென்னையைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சியை நடத்துவதற்காக ரூ. 8.45 கோடி தமிழக அரசால் ஒதுக்கப்பட்டது. சென்னையைப் பொறுத்த வரையில், இந்த செயல்பாடு பபாஸி நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டு தமிழக அரசால் ரூ. 75 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது என்று மனுதாரர் கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி அனிதா சுமந்த் தானாக முன்வந்து பபாஸி-யை ஒரு தரப்புப் பிரதிவாதியாக இணைத்து, இந்த மனுவுக்கு ஜனவரி 2, 2024-க்குள் பதிலளிக்குமாறு மாநில அரசுக்கும் பபாஸிக்கும் உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“