Advertisment

ஹாய் கைய்ஸ் : இசைப்புயலின் ஆர்ப்பரிப்பில் தண்ணீர் பாதுகாப்பு பாடல்

Hi guys : ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் குழாயில் வரும் குடிநீரை அனைவரும் பருக கூடிய நிலை ஏற்பட வேண்டும். இதுதான் எனது ஆசை

author-image
kumaranbabu tk
புதுப்பிக்கப்பட்டது
New Update
a r rahman, water conversation, corona virus, madurai, health department, agrickuture, USA, erode, tambaram, sanitation workers

a r rahman, water conversation, corona virus, madurai, health department, agrickuture, USA, erode, tambaram, sanitation workers

ஹாய் பிரெண்ட்ஸ் எப்படி இருக்கீங்க...

Advertisment

நிச்சயமா நல்லா இருப்பீங்க, வாங்க அதே உத்வேகத்தோடு இன்னைய நிகழ்ச்சிக்கு போயிருவோம்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

இசைப்புயல், ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரஹ்மான். தண்ணீர் பாதுகாப்பு குறித்த பாடலை உருவாக்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, தண்ணீர் தேவை குறித்து அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தண்ணீர் விழிப்புணர்வு குறித்து உலக அளவில் ஒரு பாடலை நான் உட்பட பலர் பாடி உள்ளோம். விரைவில் அதை வெளியிட உள்ளோம். நான் தான் அதற்கு இசை அமைத்துள்ளேன். தண்ணீர் அடிப்படை உரிமையாக இருக்க வேண்டும். ஏழைப் பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் குழாயில் வரும் குடிநீரை அனைவரும் பருக கூடிய நிலை ஏற்பட வேண்டும். இதுதான் எனது ஆசை. இந்த உலக கீதம் என்ற பெயரில் விரைவில் வெளியாகும் என கூறினார்.

ஹாய் கைய்ஸ் : நாங்களும் கிராமத்தான் தான்லே...சொல்கிறார்கள் சென்னைவாசிகள்

ஹாய் கைய்ஸ் : பிரியா பவானி சங்கர் இனி போலீஸ் பவானி சங்கர் - மாபியா அட்டகாசம்

அமெரிக்காவில் பணியாற்றியபடி, ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே, இயற்கை முறையில் விவசாயம் செய்யும், வேளாண் பொறியியல் பட்டதாரி ஜேக்கப் சத்தியசீலன் : நிலத்தை சமன்படுத்தி, வேலி போட்டு, ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, யானை போன்ற காட்டு விலங்குகள் உள்ளே வராமல் இருக்க, தொங்கும் மின் வேலிகள் அமைத்து, 'பக்கா'வாக, விவசாய பணிகளில் ஈடுபட்டேன்.மாதுளை, கொய்யா, பப்பாளி, முருங்கை, அத்தி போன்ற மரங்களை, வேலி ஓரங்களில் வைத்தேன். 30 பாக்கு மரங்கள், 30 தென்னை மரங்கள், 100 வாழைகள் உள்ளன. இத்துடன், 100 நாட்டுக்கோழிகள், மூன்று நாட்டு மாடுகள், ஏழு வட மாநில மாடுகளுடன், ஒரு காளையும் உள்ளது. நானும், அமெரிக்காவில் இருந்தபடி, 24 மணி நேரமும், கண்காணிப்பு கேமரா மூலம் பண்ணையை கண்காணித்தபடியே உள்ளேன். மணிமுத்து தம்பதிக்கு, 'ஸ்மார்ட் போன்' வாங்கிக் கொடுத்துள்ளேன். நோய் அல்லது விளைச்சல் குறித்து, எனக்கு, 'வாட்ஸ் ஆப்'பில் படம் அனுப்புவர்; வீடியோ கால் அழைப்பிலும் வருவர்; ஆலோசனைகளை வழங்குவேன். அவ்வப்போது இங்கு வந்து, விவசாயத்தை பார்வையிட்டு, திரும்பிச் செல்கிறேன். இன்னும், ஐந்தாண்டுகளுக்கு அமெரிக்காவில் இருப்பேன். அதன்பின், குடும்பத்துடன் நாடு திரும்பி, முழு அளவில் விவசாயத்தில் ஈடுபட போகிறேன்; பலருக்கு வழிகாட்டியாகவும் மாற உள்ளேன்!

வாழ்த்துக்கள் தோழரே...

போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி, தாம்பரம் நகராட்சியின், துப்புரவு ஊழியர்கள், கைகளில் குப்பையை அகற்றி வருவதாக, புகார் எழுந்துள்ளது. தனியார் நிறுவனத்தினர், தங்களின் ஊழியர்களுக்கு மாதம், 2 லட்சம் ரூபாயில், பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதாக, அதிகாரிகளிடம் கணக்கு காட்டுகின்றனர்.அவற்றை, ஊழியர்களுக்கு வழங்குவதே இல்லை. இதுவே, துப்புரவு ஊழியர்கள் கைகளில் குப்பையை அகற்ற வேண்டிய, அவல நிலை ஏற்படுத்துகிறது.உயர் அதிகாரிகள் கவனித்து, இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பாவம் தான்...

'கொரோனா' வைரஸ் பாதிப்பால் நிலைகுலைந்துள்ள சீனாவில் இருந்து வீடு திரும்பிய மதுரையைச் சேர்ந்த 77 பேரை சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்கின்றனர். வீட்டைவிட்டு வெளியே வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஓகே பிரெண்ட்ஸ், மீ்ண்டும் மற்றொரு நிகழ்ச்சியில் சந்திப்போம். Bye..

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus A R Rahman Madurai Water
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment