ஹாய் பிரெண்ட்ஸ், நாளையில இருந்து 2 நாட்கள் லீவு, வீக் எண்டை எப்படி ஜாலியா செலிபிரேட் பண்ணலாம்னு யோசிச்சுகிட்டு இருக்கீங்களா…வாங்க அதே ஜோரோட இன்றைய நிகழ்ச்சிக்கு போயிறலாம்…
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், ‘வில்லேஜ் டிக்கெட் – 2020’ எனும் கிராமிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இங்கு, கிராமத்தைப் போல் வயலில் உழவு, நடவு, கதிர் அடித்தல், திருவிழாக் கடைகள், கிராமிய கைவினைப் பொருட்கள், திருவிழாத் தேர், மாட்டு வண்டி, குதிரை வண்டி, ஜல்லிக்கட்டு காளை என, கிராமத்தை கண்முன் நிறுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.அத்துடன், தோல் பாவைக் கூத்து, கரகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். நகரத்திலேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கு, கிராமத்தைப் பற்றிய புரிதலை இந்நிகழ்வு ஏற்படுத்தும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் ஒரு கிராமம்…
ஹாய் கைய்ஸ் : பிரியா பவானி சங்கர் இனி போலீஸ் பவானி சங்கர் – மாபியா அட்டகாசம்
ஹாய் கைய்ஸ் : உண்மையான காதல் மன்னன் இவர்தானோ…. திருமணம் செய்ய போட்டி போடும் பெண்கள்
அமெரிக்காவில் உள்ள இந்தியர்களில் 2019 ம் ஆண்டு மட்டும் குடியேற்ற விதிகளை மீறியதாக 1616 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 2014 ம் ஆண்டிற்கு பிறகு ஒரே ஆண்டில் அதிகமானவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளது தற்போது தான். 2018 ம் ஆண்டில் அதிகபட்சமாக 359 பெண்கள் உள்ளிட்ட 9818 இந்தியர்கள் குடியேற்ற விதிகளை மீறியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 611 பேர் அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பாவம் தான்…
அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விமானத்தில் இருந்து குதித்து வானில் நடந்து காட்டிய வீடியோ வெளியாகி உள்ளது. சில தினங்கள் முன், நண்பர்களுடன் சிறு ரக விமானத்தில் சென்ற அவர், எல்சினோர் ஏரியின் மேற்பரப்பில் விமானம் சென்று கொண்டிருந்தபோது, பல ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்தார். அந்தரத்தில் பறந்த போதே, கண்ணாடியில் நடப்பது போன்று செய்து காட்டினர். மணிக்கு, 200 கி.மீ., வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருந்த நேரத்தில் அவரது இந்த குறும்பு நடை இணையத்தில் வெளியாகி கவனத்தை பெற்று வருகிறது.
ஆஹா மெல்ல நட மெல்ல நட…
கர்நாடக அரசு தனது மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் உட்பட பல துறை சார்ந்த தொழில்களிலும், 75 சதவீதம் கன்னடர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்க வகை செய்யும், வகையிலான சட்டத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
பெங்களூரில் வேலை பார்க்கும் தமிழரா.. எதுக்கும் மூட்டை முடிச்சை கட்டி ரெடியாக இருக்கவும்!
ஓகே பிரெண்ட்ஸ், மீண்டும் மற்றொரு நிகழ்ச்சியில் சந்திப்போம்….
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
நான் ஒரு பெரிய எழுத்து சோம்பேறி என்று பாலு மகேந்திரா கூறுவார்- கதைசொல்லி பவா செல்லதுரை…