வணக்கம் வந்தனம் சுஸ்வாகதம் நமஸ்கார்
ஹாய் பிரெண்ட்ஸ், வாங்க நாம நேரா நிகழ்ச்சிக்கு போயிறலாம்
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தில் உள்ள, கண்ணகி நகர், எழில் நகர் மற்றும் சுனாமி குடியிருப்பில், 23 ஆயிரம் வீடுகள் உள்ளன. நான்கு மாடி வரை, ‘பிளாக்’ பிரித்து, வீடுகள் கட்டப்பட்டுள்ளன.இந்த பகுதியை வண்ணமயமாக்க, ‘ஸ்டிரீட் ஆர்ட் இந்தியா பவுண்டேஷன்’ என்ற தன்னார்வ அமைப்பு, கட்டடங்களில் சுவர் ஓவியம் வரைய முன்வந்துள்ளது.
நல்ல முயற்சி, வாழ்த்துகள்..
அண்ணா பல்கலை நடத்திய செமஸ்டர் தேர்வில், 60 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை. பயிற்சி அளிக்கப்படாத பாடங்களில் இருந்து வினாத்தாள் தயாரித்ததால், மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக, பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். அண்ணா பல்கலையின் வளாக கல்லுாரிகளுக்கும், அந்த கல்லுாரி பேராசிரியர்களே தேர்வு நடத்தி, விடைத்தாளை திருத்தி, மதிப்பெண் வழங்குகின்றனர்.இந்த பாரபட்சமான நடவடிக்கையால், இணைப்பு அந்தஸ்து பெற்ற இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.அண்ணா பல்கலையின் இந்த நடவடிக்கை, அனைத்து கல்லுாரிகளையும் தன்னாட்சி அந்தஸ்துக்கு செல்ல வேண்டும் அல்லது மாணவர்கள் தன்னாட்சி கல்லுாரிகளில் சேர வேண்டும் என்ற, மறைமுக அழுத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இவ்வாறு, பெற்றோர்கள் கூறினர்.
அடப்பாவமே…
ஹாய் கைய்ஸ் : பிறக்கும்போதே கொரோனா எமனை வென்ற உமன்
ஹாய் கைய்ஸ் : தமிழ் “காளையை” விரும்புகிறார் ‘புத்தம் புது காலை’ ஹீரோயின்
அண்மையில், புதுவிதமான துணி துவைக்கும் இயந்திரத்தை சாம்சங் அறிமுகப்படுத்தியிருக்கிறது. துவைத்தல் என்பதைவிட, சுத்தம் செய்தல் என்பது தான் சரி. சாம்சங்கின், ‘ஏர் டிரெஸ்சர்’ என்ற பெட்டி போன்ற கருவியில், சுத்தம் செய்ய வேண்டிய உடைகள் சிலவற்றை மாட்டி வைத்துவிட்டால், குழாய்கள் மூலம் அதிவேகமான காற்று துணிகளின் மேல் பாய்ந்து மேலோட்டமாக இருக்கும் துாசி, அழுக்கு போன்றவற்றை நீக்கிவிடுகிறது. பிறகு நீராவி அடித்து ஆழமாக படிந்துள்ள அழுக்குகளை போக்குகிறது. அடுத்து, வியர்வை வாடை, சிகரெட் நாற்றம், உணவு வாடை போன்றவற்றை போக்கி, மெல்லிய நறுமணம் ஒரு குழாய் மூலம் பாய்ச்சப்படுகிறது; அவ்வளவுதான்.
விலை எவ்வளவுனு கேட்டுக்கோ மக்கா..
டில்லி சட்டசபை தேர்தலில் ராஜிந்தர் நகர் தொகுதியில் போட்டியிடும் ஆம்ஆத்மி வேட்பாளரான ராகவ் சதாவை திருமணம் செய்ய 12க்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்துள்ளதாக அவரின் சமூக வலைதள குழு எடுத்த புள்ளி விபரத்தில் தெரிய வந்துள்ளது.31 வயது ஆடிட்டரான ராகவ், ஆம்ஆத்மி கட்சியில் இணைந்து, இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். ஆம்ஆத்மி கட்சியின் 39 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இவருக்கு போகும் இடமெல்லாம் மக்களின், குறிப்பாக இளம்பெண்களின் வரவேற்பு அமோகமாக உள்ளது. இந்த ஆதரவுகள் ஓட்டுக்களாக மாறுகிறதோ இல்லையோ, திருமண விண்ணப்பங்களாக மாறுகிறது. இவரை திருமணம் செய்ய இளம்பெண்கள் நான்-நீ என போட்டிப்போட்டு வருகின்றனர்.டுவிட்டர் மூலம் பலர் திருமணம் கோரிக்கை வைத்து வருவதாக கூறும் ராகவ், தற்போது பொருளாதாரம் சரியாக இல்லாததால் திருமணம் செய்ய இது சரியான நேரமல்ல என தெரிவித்துள்ளார்.
ஓகே பிரெண்ட்ஸ், மீண்டும் மற்றொரு நிகழ்ச்சியில் சந்திப்போம். Bye
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil