ஹாய் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கீங்க. இப்பத்தான் 2020 ஆரம்பிச்சமாதிரி இருந்துச்சு, அதுக்குள்ளேயும் ஒரு மாசம் போயிருச்சு..
வாங்க, நாமளும் அதேவேகத்தோட இன்னய நிகழ்ச்சிக்கு போயிருவோம்…
பாரதிய ஜனதா கட்சிக்கு பாகிஸ்தான் மீது காதல் இருப்பதால் தான் பாகிஸ்தான், நாட்டவர் ஒருவருக்கு குடியுரிமை கொடுத்து, பத்ம விருதும் வழங்கி உள்ளதாக பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் குற்றம்சாட்டி உள்ளார்..
தில்லு துரைக்கு அக்காவா இருப்பாங்களோ….
அமெரிக்காவில் 2ம் வகுப்பு சிறுமி, பரிசாக கிடைத்த தன் பென்சில் திருடப்பட்டதாக புகார் அளித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் கூறப்பட்டிருப்பதாவது : முமுமையான வருகை பதிவிற்காக, எனக்கு பென்சில் பரிசாக கிடைத்தது. அதனை எனது பென்சில் பாக்சில் வைத்தேன். அதுபோன்ற பல பென்சில்களை நான் மட்டுமே வைத்திருக்கிறேன். ஆனால் இப்போது அதை காணவில்லை. அதற்கு பதிலாக அசிங்கமான வேறு ஒரு மஞ்சள் பென்சில் இருக்கிறது. அதை என் வகுப்பு தோழி எடுத்திருக்கலாம் என அம்மாவிடம் கூறினார். சிறுமியின் அம்மாவோ, ‘இது ஒரு பென்சில் தானே ‘ என கூற, “இது ‘பெர்பெக்ட் அடெண்டென்ஸ்’பரிசாகக் கிடைத்த பென்சில்,” என்று திருத்துகிறாள். இவ்வாறு வீடியோவில் கூறப்பட்டிருந்தது.
கீழைநாடோ மேலைநாடோ. மழலையின் மொழிக்கு நிச்சயம் மவுசு தான்…
ஹாய் கைய்ஸ் : அன்புள்ள திருடனுக்கு….கடிதம் எழுதிய ஆசிரியர்கள் – ருசிகர தகவல்
ஹாய் கைய்ஸ் : சென்னை அருகே சீன கப்பல் – திக் திக் மனநிலையில் சென்னைவாசிகள்…
மகாத்மா காந்தி தலைமையில் நடந்த சுதந்திர போராட்டம் ஒரு நாடகம் என முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., எம்.பி.,யுமான அனந்தகுமார் ஹெக்டே பேசி உள்ளது சர்ச்சையாகி உள்ளது. காந்தியின் சாகும் வரை உண்ணாவிரதம், சத்யாகிரக போராட்டத்தாலேயே நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்ததாக காங்.,ஐ ஆதரிப்போர் கூறி வருகின்றனர். அது உண்மையல்ல. சத்யாகிரகத்தால் ஆங்கிலேயர்கள் நமது நாட்டை விட்டு செல்லவில்லை. விரக்தியாலேயே ஆங்கிலேயர்கள் சுதந்திரம் அளித்தனர். வரலாற்றை படிக்கும் போது எனது ரத்தம் கொதிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
ரணகளம் ஆகப்போகுது…..அது மட்டும் நிச்சயம்
புத்தம் புது காலை என்ற பாட்டை நம்மை கண்கொட்டாமல் ரசிக்க வைத்த நடிகை சிருஷ்டி டாங்கே, தமிழ் இளைஞர் ஒருவரைத்தான் கல்யாணம் கட்டிக்கொள்ள விருப்பப்பர்றாராம்..
யாருக்கு அந்த அதிர்ஷ்டம் குடுத்து வச்சிருக்கோ……
ஓகே பிரெண்ட்ஸ், வாங்க நாம மறுபடியும் இன்னொரு நிகழ்ச்சியில சந்திப்போம். Bye
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Srushti dange mahatma gandhi bjp pakistan viral video
Tamil news today live : திமுக தேர்தல் வாக்குறுதிகள் ..மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்!
1 மாசம் ஆனாலும் கெட்டு போகாது… வாசனையான பூண்டு பருப்பு பொடி!
ஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன?
சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை
கடும் கட்டுப்பாடுகளுடன் 44-வது புத்தக கண்காட்சி : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு