ஹாய் பிரண்ட்ஸ், வாங்க நாம நேரடியாக நிகழ்ச்சிக்கு போயிருவோம்
சென்னையில் தன்னோட மொபைல் போன்ல குழந்தைகள் ஆபாச வீடியோக்களை வைத்திருந்த ஹரீஷ் என்ற இளைஞரை, போலீஸ் கைது பண்ணியிருக்காங்க.. கைது செய்யப்பட்ட ஹரீஷிடம் போலீசார் நடத்திய விசாரணையில், 2 வருசமா, அந்த மாதிரி படங்களை தான் டவுன்லோடு பண்ணி பாத்து வந்ததா சொல்லியிருக்காரு.
இதுமாதிரி எல்லாம் பண்ணி தேவையில்லாம மாட்டிக்காதீங்க மக்காஸ்..
மருத்துவ கழிவுகளுடன், தமிழகம் நோக்கி வந்துள்ள சீன கப்பலால் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கப்பல் விவகாரம் தொடர்பாக, சென்னை துறைமுக கழக அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினர். இருந்தபோதிலும் என்ன முடிவு இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டது என்ற விபரம் வெளியிடப்படவில்லை.
ஹாய் கைய்ஸ்: சும்மா முள்ளுங்க குத்திச்சு – அதுக்கு இந்த அக்கப்போரா…..
ஹாய் கைய்ஸ்: வங்கிகளுக்கு தொடர்ந்து 3 நாள் லீவு – சம்பள நாளா பார்த்து ஸ்டிரைக் வைக்குறாங்க
நகர பஸ்களில், பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்யும் ஆண்களுக்கு அபராதம் விதிக்க, ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது.மேலும், பஸ்களில் தொல்லை தரும் ஆண்கள் பற்றி புகார் செய்ய, பெண்களுக்கு என தனி தொலைபேசி எண் தரவும் முடிவு செய்யப்பட்டது என, புவனேஸ்வர் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
1,2 பேர் பண்றதனால ஒட்டுமொத்த ஆண் சமூகத்துக்கும் கெட்ட பெயரு…
டிஜிட்டல் இந்தியா திட்டத்தால, இந்தியாவில் ஏற்றத்தாழ்வுகள் குறைஞ்சிருக்குறதா ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரத்துறை சார்பில நடத்தப்பட்ட ஆய்வுல தெரியவந்துருக்காம்….2015ல், இந்தியாவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை, பாதிக்கு பாதியாக குறைந்தது. நாட்டின், 80 சதவீதத்தினர், வங்கி கணக்கு வைத்துள்ள நிலையை, 2017ல் இந்தியா எட்டியது. இங்கு, டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊக்குவிக்கப்பட்டதன் வாயிலாக, ஏற்றத்தாழ்வுகள் பெருமளவில் குறைஞ்சா தெரிவிக்கப்பட்டிருக்கு..
நல்ல விஷயம் தான்….