scorecardresearch

ஹாய் கைய்ஸ்: வங்கிகளுக்கு தொடர்ந்து 3 நாள் லீவு – சம்பள நாளா பார்த்து ஸ்டிரைக் வைக்குறாங்க

ஹாய் கைய்ஸ் : கண்டங்கள் கண்டு வியக்கும் ; இனி ஐ.நா.வும் உன்னை அழைக்கும் என்பதன் முதல்படி இதுதானோ!!!

bank strike, rajinikanth, thuglak function, karunanidhi, azhagiri, delhi assembly election, aam aadmi, kamalhaasan, makkal needhi maiam, election compaign, edappadi palanichami
bank strike, rajinikanth, thuglak function, karunanidhi, azhagiri, delhi assembly election, aam aadmi, kamalhaasan, makkal needhi maiam, election compaign, edappadi palanichami

வணக்கம் நண்பர்களே..

ஹாய் பிரெண்ட்ஸ், வழக்கமான பணிகள ஆரம்பிச்சிட்டீங்களா, வாங்க அதே ஜோரோட நாம இன்னயோட நிகழ்ச்சிக்கு போயிறலாம்…

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

டில்லி சட்டசபை தேர்தல், பிப்ரவரி 8ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்ய நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுப்பதாக, ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் சோம்நாத் பாரதி தெரிவித்துள்ளார்.

கண்டங்கள் கண்டு வியக்கும் ; இனி ஐ.நா.வும் உன்னை அழைக்கும் என்பதன் முதல்படி இதுதானோ!!!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரியின் பிறந்தநாள் வரும் 30ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, மதுரை முழுவதும் கட்சியை மீட்க வா, வெற்றிடத்தை நிரப்பு, சன்னின் சன்னுக்கே தடையா?, ராசியானவர், துரோகம் போன்ற வாசகங்கள் அடங்கிய வாசகங்கள் அடங்கிய பிறந்தநாள் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளன. இந்த வாசகங்கள், திமுகவினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

2013, ஜனவரி 31ம் தேதி தான், அழகிரியின் ஆதரவாளர் பொட்டு சுரேஷ் படுகொலை செய்யப்பட்டார்.

இவரே கத்துவாராம் ; இவரே உஷ்ஷ்னு சொல்லுவாராம் : விஜய்யின் மாஸ்டர் புதிய லுக் ரிலீஸ்

Hi guys : பத்தாவது மாசத்துல பொறக்குது கட்சி?….காத்திருப்போம்

தேவையில்லாத எந்த கருத்துகளையும் பொதுவெளியில் பேச வேண்டாம் என்று அமைச்சர்களுக்கு முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

துக்ளக் நிகழ்ச்சியில் ரஜினியின் பேச்சு தொடர்பாக, அதிமுக அமைச்சர்கள் வெவ்வேறு கருத்துகளை தெரிவித்து வரும்நிலையில், இந்த விவகாரத்தில் அதிமுகவிலேயே ஒருமித்த கருத்து இல்லை என்று பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், முதல்வர் பழனிசாமியின் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

திட்டமிட்டபடி வங்கி வேலைநிறுத்தம்

சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1ம் தேதிகளில் மேற்கொள்ள உள்ள வேலைநிறுத்தப்போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று வங்கி ஊழியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய தொழிலாளர் நல ஆணையர் ராஜன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூதானமா இருந்துகோங்க மக்காஸ்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Bank strike delhi assembly polls kamalhaasan