இவரே கத்துவாராம் ; இவரே உஷ்ஷ்னு சொல்லுவாராம் : விஜய்யின் மாஸ்டர் புதிய லுக் ரிலீஸ்

Hi Guys : டில்லியில நடந்த பரேடுல, நம்ம மாநிலத்தோட பெருமையை பறைசாத்துற வண்ணமா, பிரமாண்ட அய்யனார் சிலை ஊர்வலத்துல கொண்டுவரப்பட்டுச்சு

tamil nadu, republic day 2020, republic day parade, ayyanar statue, sapling, chennai, anna university, robot, dance, vijay, vijay sethupathi, master, lokesh kanagaraj, master look
tamil nadu, republic day 2020, republic day parade, ayyanar statue, sapling, chennai, anna university, robot, dance, vijay, vijay sethupathi, master, lokesh kanagaraj, master look

வணக்கம் வந்தனம் சுஸ்வாகதம் நமஸ்கார்

ஹாய் பிரெண்ட்ஸ், வீக் எண்டு நல்லபடியா முடிஞ்சதா? மறுபடியும் ரொட்டீன் லைப்புக்கு வந்துட்டீங்களா…

ஓகே, வாங்க இன்னையோட நிகழ்ச்சிக்கு போகலாம்.

இந்தியாவோட 71வது குடியரசு தினம், நேத்திக்கு நாடுபுல்லா உற்சாகமா கொண்டாடியாச்சு, டில்லியில நடந்த பரேடுல, நம்ம மாநிலத்தோட பெருமையை பறைசாத்துற வண்ணமா, பிரமாண்ட அய்யனார் சிலை ஊர்வலத்துல கொண்டுவரப்பட்டுச்சு. பாரம்பரிய இசை, அலங்கார வாகனங்களும் வந்தது.

பாக்கவே கண்கொள்ளா காட்சியா இருந்துச்சி…

Hi guys : பத்தாவது மாசத்துல பொறக்குது கட்சி?….காத்திருப்போம்

Hi guys : கோமாளித்தனம்னா என்ன? த்ரிஷாவின் அசரவைக்கும் பதில்

ரோபா மூலம் மரக்கன்று நடும் புதுமையான நிகழ்ச்சி, சென்னை அண்ணா பல்கலைகழக வளாகத்தில சமீபத்துல நடந்துச்சு, தேசிய அளவில் நடந்த இந்த நிகழ்ச்சியில, தமிழகத்தில இருந்து மட்டும் 300க்கும் மேற்பட்ட ஸ்டூடண்ட்ஸ் கலந்துகிட்டாங்க. மொபைல் போன் ஆப் உதவியோட, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் 15 வழிகள்ல 326 மரக்கன்றுகள நட்டு ஸ்டூடண்ட்ஸ் அசத்திட்டாங்க..

வரவேற்கத்தக்க முயற்சி…

சென்னையில பிரமாண்ட நடன நாட்டிய நிகழ்ச்சி நடந்துச்சு. இதில 2 ஆயிரம் மாணவ மாணவியர் கலந்துகிட்டதோடு மட்டுமல்லாம, ஆறு பண்புகளை வலியுறுத்தி பரதநாட்டியம் ஆடினர். நாட்டுப்பற்று, வீரம், ஜீவராசிகள் மீது காட்டும் பரிவு என, பாடல் வரிகளுக்கு ஏற்ப, முகபாவனைகளுடன் ஆடிய நடனம், பார்வையாளர்களை மெய்சிலிக்க வைத்தது.

சாதனை முயற்சி… வாழ்த்துக்கள்…

மாநகரம், கைதி படங்களை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய், விஜய் சேதுபதியை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார். மாஸ்டர் படம் தொடர்பான இரண்டு லுக்குகள் வெளியான நிலையில், நேற்று, அப்படத்தின் 3வது லுக் வெளியானது. எதிர் எதிர்த்திசையில், விஜய்யும், விஜய் சேதுபதியும் கத்துவது போன்று லுக் வெளியாகியிருந்தது. இந்த லுக்கிற்கு நெட்டிசன்கள் வச்சு செஞ்சுவிட்டனர். இந்த லுக்கு ஏற்கனவே பல படங்களில் வந்துவிட்டதாக தெரிவித்துள்ள நெட்டிசன்கள், மாஸ்டர் 2வது லுக்கில், விஜய் உஷ் என்று சொல்வது போல இருந்தது. அதை இதனுடன் ஒப்பிட்டு அவர்கள் கருத்துகளையும், மீம்களையும் தெரிவித்து வருகின்றனர்.

நீ மாஸ்டர்னா நான் ஹெட்மாஸ்டர் – வச்சு செய்யும் நெட்டிசன்கள்..

 

ஓகே பிரெண்ட்ஸ், மற்றொரு நிகழ்ச்சியில மீண்டும் சந்திப்போம். Bye

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Master look vijay ayyanar statue

Next Story
இன்றைய செய்திகள்: அமைச்சரை விமர்சித்தற்காக திமுகவினர் கைது தொடர்ந்தால், மக்களைத் திரட்டி போராடுவேன் – ஸ்டாலின்Tamil Nadu News Today Live Updates
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X