ஹாய் பிரெண்ட்ஸ், வாங்க நேரா நிகழ்ச்சிக்கு போயிறலாம்…
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
சென்னை துறைமுக நுழைவுச்சீட்டை, ஆன்லைனில், பெறும் வசதி அறிமுகமாகியுள்ளது. நுாற்றாண்டு சிறப்பு வாய்ந்த சென்னை துறைமுகத்தில், காகித பயன்பாட்டை குறைக்கும் வகையில், அனுமதிச்சீட்டு, ஆன்லைனில் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள, 12 பெரிய துறைமுகத்திலேயே, முதல் முறையாக, சென்னையில் இந்த வசதி அமல்படுத்தப்பட்டுள்ளது. சில மாதங்களாக, சோதனை அடிப்படையில் இருந்த இம்முறை, தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வரவேற்கத்தக்க முயற்சி…
ஹாய் கைய்ஸ் : தமிழ் “காளையை” விரும்புகிறார் ‘புத்தம் புது காலை’ ஹீரோயின்
ஹாய் கைய்ஸ் : அன்புள்ள திருடனுக்கு….கடிதம் எழுதிய ஆசிரியர்கள் – ருசிகர தகவல்
’99 ஸ்மார்ட் போன்களில், ஒரே நேரத்தில் கூகுள்மேப் செயலியை ஓபன் செய்த ஜெர்மானியர் ஒருவர், எல்லா மொபைல் போன்களையும், ஒரு தள்ளுவண்டியில் ஒன்றாக வைத்து, பெர்லின் நகர வீதிகளில் அதை இழுத்து செல்ல ஏற்பாடு செய்தார். இந்த கண்கட்டு வித்தையின் காரணமாக, ஒரே நேரத்தில், 99 வாகனங்கள் வீதியில் செல்வதாக நினைத்து, நிஜத்தில் காலியாக கிடந்த பெர்லின் வீதிகள் அனைத்திலும், டிராபிக் நெரிசலை குறிக்கும் சிவப்பு வரிகள், கூகுள் மேப்பில் தோன்றின. இதைப்பார்த்த அப்பகுதி கூகுள் மேப் பயனாளர்களுக்கு, ஒரே, ‘ஷாக்’. எதற்காக இப்படி செய்தார் என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.
எப்படித்தான் யோசிக்கிறாங்களோ….
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு பூரண நலத்துடன் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என டாக்டர்கள் உறுதியளித்தனர். தற்போது தாயும், சேயும் பூரண நலத்துடன் உள்ளதாகவும் , தொடர்ந்து தீவீர கண்காணிப்பில் உள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது.
எமனை வென்ற உமன்….
சினிமா உலகில் மிக பிரபலமான நடிகைகளான குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன், சமந்தா, ஸ்ருதிஹாசன், ஐஸ்வர்யா ராஜேஷ், நதியா, லக்ஷ்மி மஞ்சு, ஷோபனா உள்ளிட்ட பல நடிகைகளை மஞ்சு, ஜி.வெங்கட்ராம் போட்டோ ஷுட் நடத்தி உள்ளார். ஜி வெங்கட்ராம் நடத்தியுள்ள போட்டோ ஷூட்டில் நடிகைகள் அனைவரும் அச்சு அசலாக ரவி வர்மா வரைந்த ஓவியங்களை போலவே போஸ் கொடுத்து உள்ளார்கள். மேலும், இந்த புகைப்படங்கள் தற்போது சமூக மேலும், வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இது ரவி வர்மா வரைந்த ஓவியமா! அப்படியே ரவி வர்மா ஓவியம் போலவே இந்த புகைப்படங்கள் உள்ளதே என்று கூறி கலைஞர் ஜி.வெங்கட்ராம் அவர்களை பாராட்டியும், வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அழகு அழகோ அழகு
ஓகே கைய்ஸ், மீண்டும் இன்னொரு நிகழ்ச்சியில் சந்திப்போம். Bye