2ஜி வழக்கு, ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு இடையே என்ன வேறுபாடு? ஆ.ராசா மீண்டும் விளக்கம்

2ஜி வழக்கு – ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து ஆ. ராசா விளக்கம்.

A Rasa, MP Rasa, Ooty MP A Rasa
A Rasa, MP Rasa, Ooty MP A Rasa

தன் மீதான 2ஜி வழக்கு, ஜெயலலிதா மீதானா சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து ஆ .ராசா மீண்டும்  விளக்க மளித்தார்.

சென்னை அறிவாலயத்தில் இன்று நடந்த  பத்திரிக்கையாளர்கள் சந்திபில், ” 2ஜி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எவையும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை, ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு ஜெயலலிதா சிறை சென்றவர் என்று  ராசா தெரிவித்தார். மேலும், ஜெயலலிதா சிறை செல்ல காரணமாக இருந்த கீழமை நீதிபதி குன்ஹா அவர்களின், தீர்ப்பு உச்சநீதிமன்றத்தால் அப்படியே ஏற்றுக்கொள்ளப் பட்டது என்றும் தெரிவித்தார்.

“மிக நேர்த்தியாக ஜோடிக்கப்பட்டுள்ள குற்றப் பத்திரிக்கையில் சொல்லப்பட்ட எந்த குற்றச்சாட்டையும் சிபிஐ நிருபிக்கவில்ல என்ற முடிவிற்கு வருவதில் எனக்கு சிறிதும் தயக்கமில்லை” என்று டெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி தனது தீர்ப்பில் தெரிவித்தாக ராசா கூறினார்.

 

 

வதந்தி, ஊகம், கிசுகிசு என்பதுதான் 2ஜி வழக்கு. பொது மக்களின் இத்தகைய புரிதலுக்கு நீதி வழக்கு விசாரணையில் இடமில்லை என்ற நீதிபதிகளின்  கருத்தையும் ஆ. ராசா முன்வைத்தார்.

அதிமுக பொதுச் செயலாலளர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பின் அடர்த்தியை புரிந்து கொள்ள வேண்டும் என்று வாதிட்ட ராசா,”ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது மற்ற மூன்று குற்றவாளிகளோடு கூட்டு சதியில் ஈடுபட்டு, பல்வேறு நிறுவனங்களை, வெளியில் தெரியாவண்ணம், வெவ்வேறு பெயர்களில் தொடங்கி; வருமானத்திற்கு அதிகமாக குவித்த சொத்துக்களை, மற்ற குற்றவாளிகளின் பேரில் பதுக்கி வைத்துள்ளார். சசிகலா உள்ளிட்ட பிற குற்றவாளிகளை பயன்படுத்தி குற்றச் செயலில் ஈடுபட்ட ஜெயலலிதாவின் குற்றம் நிரூபணமாகியுள்ளது என்ற முடிவுக்கு நாங்கள் வருகிறோம் “என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்ததாக ஆ. ராசா தெரிவித்தார்.

2ஜி வழக்கு தொடர்பாக முதல்வர் தனது தகுதியை மறந்து மிக மோசமாக விமர்சித்து வருகிறார் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: A rasa 2g case verdict and jayalalitha disproportionate case verdict

Next Story
மத்திய அரசு எந்த நிலத்தையும் நெடுஞ்சாலைக்கு கையகப்படுத்த அறிவிக்கலாம்: உச்ச நீதிமன்றம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com