மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அனுமதி கோரிய ஓராண்டுக்குப் பிறகு, குட்கா ஊழல் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பிவி ரமணா, சி விஜயபாஸ்கர் ஆகியோர் மீது வழக்குத் தொடர தமிழக ஆளுநர் ஆர்என் ரவி 2023 நவம்பரில் அனுமதி அளித்தார்.
செப்டம்பர் 12, 2022 அன்று ரமணா மற்றும் விஜய பாஸ்கர் மீது வழக்குத் தொடர அனுமதி கோரிய சிபிஐயின் கோரிக்கையை மாநில அரசு கவர்னருக்கு அனுப்பியது.
இந்த விவகாரத்தில் அப்போதைய காவல் துறை டிஜிபி பெயரும் குற்றஞ்சாட்டப்படுகிறது. வழக்கில் குட்கா வியாபாரி மாதவ் ராவ், காவல் துறை அதிகாரி பாண்டியன் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில் முருகன் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த நிலையில், சி. விஜய பாஸ்கர், பி.வி ரமணா மீதான குட்கா வழக்கை எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
குட்கா ஊழலை விசாரித்த சிபிஐ, “குற்றம் சாட்டப்பட்ட 11 பேர்களில், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் எஸ்.ஜார்ஜ், டி.கே. ஆகியோருக்கு எதிராக மாவா/குட்கா சப்ளையர்களிடம் இருந்து சட்டவிரோதமாக வசூலித்தது தொடர்பான விசாரணை அறிக்கையை மாநில அரசிடம் சமர்பித்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“