தமிழ்நாட்டின் சின்ன முட்டம் மீன்பிடித் துறைமுகத்துக்கு தனிப் பாரம்பரியம் உண்டு. இந்தத் துறைமுகத்துக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மீன்வளத் துறையால் படகு ஒன்று வாங்கப்பட்டது. அந்தப் படகு 20 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வழியாக கடல் மார்க்கமாக கன்னியாகுமரி கொண்டுவரப்பட்டது. இதற்குப் பின் ஒரு நாள் கூட கன்னியாகுமரி முக்கடல் பரப்பில் அந்தப் படகு பயணித்தே இல்லை.
Advertisment
அதாவது, துறைமுகப் பகுதியில் கட்டப்பட்ட வலம்புரி படகு மருந்துக்கு கூட ஒருநாள் கூட மீனவர்களின் படகின் பாதுகாப்பு கருதி கடலுக்குள் சென்றதே இல்லை. யானை வாங்கியவன் அங்குசத்தை வாங்க வில்லை என்ற பழமொழியை புதுப்பிக்கும் வகையில்.தமிழக மீன்வளத்துறை படகு ஓட்டுனரை பணிக்கு ஒருவரையும் நியமிக்கவில்லை.
சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் கடல் பரப்பில் 10_ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பயன்படுத்தாது கிடந்த நிலையில் துருப்பிடித்தது. கடல் நீர் வலம்புரி படகின் உள் புகுந்து படகு ஒரு பக்கமாக சரிய தொடங்கியது. இந்த நிலை சில ஆண்டுகள் நீடித்தது.
இந்த நிலையில் படகில் இருந்து துரு ஏறிய இரும்பு மீனவர்கள் உள்பட பலருக்கும் காயத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து படகை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. தற்போது இந்தப் படகை முற்றிலும் பணிகள் சனிக்கிழமை (ஜூன் 10) தொடங்கின. மீனவர்கள் பாதுகாப்பு படகு பயன் படுத்தாமால் துரு பிடித்து போனதோடு மட்டுமில்லாமல் மக்களின் வரிப் பணமும் வீணடிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“