தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் காலம் தொடங்கியுள்ளது. இதனால் வழக்கத்தை விட வெப்பம் கடுமையாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், “அடுத்த 2 தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது, 7 முதல் 9 ஆம் தேதி வரை அடுத்த 3 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
மேலும், 5 முதல் 9ஆம் தேதி வரை அடுத்த 5 தினங்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4" செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் எனவும், 5 & 6 ஆகிய தேதிகளில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ப்பநிலை 3*-5° செல்சியஸ் இயல்பை விட மிக அதிகமாக இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அடுத்த 5 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 41*-43° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 39-40° செல்சியஸ் ஆகவும், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36*-38* செல்சியஸ் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்” எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவமனை டீன், “வெயிலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
5 படுக்கைகள் கொண்ட தனி வார்டில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“