தி.மு.க, ஜி ஸ்கொயர் உடனான தொடர்புகள் பற்றிய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. ஆனால், மாநிலத்தில் பலரும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டுகள், 6 ஆண்டுகளுக்கு முன்பு அ.தி.மு.க தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்ட சுரங்க தொழிலதிபர் மீது நடத்தப்பட்ட சோதனைகளுக்கு இணையானது என்று கூறுகிறார்கள்.
தென்னிந்தியாவின் முன்னணி கட்டுமான நிறுவனம் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் ரியல்டார்ஸ் பிரைவேட் லிமிடேட் நிறுவனம் கடந்த வார தொடக்கத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டபோது, டெல்லியின் உத்தரவின் பேரில்தான் நடத்தப்படுவதாக சுட்டிக் காட்டப்பட்டன.
சொந்தக் கட்சியிலும் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க-விலும் உள்ள பலரைத் தவறான வழியில் விமர்சித்த பா.ஜ.க-வின் இளம் பரபரப்பான தலைவர் அண்ணாமலை, ஜி ஸ்கொயர் தி.மு.க-வின் முதல் குடும்பத்துடன் நெருக்கமாக தொடர்புடையது என்று குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து ஐ.டி சோதனைகள் நடைபெற்றது.
ஜி ஸ்கொயர் மற்றும் தி.மு.க இரண்டுமே இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளன. அதே நேரத்தில், பா.ஜ.க-வுக்கு எதிரான கட்சிகள் இது மோடி அரசாங்கத்தின் கீழ் உள்ள மத்திய அமைப்புகள் எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட மற்றொரு சோதனை முயற்சி என்று கூறப்பட்டன.
தமிழக அரசியலில், 2016-2017 ஆண்டில் சுரங்க தொழிலதிபர் இடங்களிலும் சமீபத்தில் ஜி ஸ்கொயரில் நடத்தப்பட்ட சோதனைகளுக்கு இடையேயான ஒற்றுமைகளைப் பற்றி ஊகங்கள் இருகின்றன. இது மாநிலத்தின் அரசியல் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது.
அப்போது சேகர் ரெட்டி தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட ஐ-டி ரெய்டுகள், மாநிலத்தில் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க.வின் முக்கிய தலைவர்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து. அந்த சோனை நடவடிக்கை தலைமைச் செயலர் அலுவலகம் வரை சென்றது.
2016 டிசம்பரில் ஜெயலலிதா மறைந்ததால், அ.தி.மு.க அணிகளாக பிளவுபட்டு பலவீனமாக இருந்தது. பா.ஜ.க மாநில அரசியலில் தனக்கான வழியை உருவாக்கிக்கொள்ள வாய்ப்பாகப் பார்த்தது.
மணல் அள்ளும் தொழிலுக்கு எதிரான வருமான வரித் துறையின் வரி ஏய்ப்பு விசாரணையின் ஒரு பகுதியாக ரெட்டி இடங்களில் ரெய்டு செய்யப்பட்டது. 2016 டிசம்பரில் ரெட்டியின் வளாகத்தில் நடந்த சோதனையில் ரூ.154 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். இதில் ரூ.34 கோடி மதிப்புள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுகளும் 167 கிலோவுக்கும் அதிகமான தங்கமும் அடங்கும். பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டு ஒரு மாதமே ஆன நிலையில், புதிய ரூபாய் நோட்டுகள் கிடைப்பது கடினம் என்ற நிலையில், ஒரு நபரிடம் இருந்து ரூ.34 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது பலரின் புருவங்களை உயர்த்தியது. சட்ட விரோதமாக செல்லாத நோட்டுகளை மாற்றியதன் மூலம் அரசுக்கு 247.13 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக ரெட்டி மீது குற்றம் சாட்டப்பட்டது.
இருப்பினும், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, செப்டம்பர் 2020-ல், சென்னையில் உள்ள சி.பி.ஐ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம், ரெட்டிக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்தது. இந்த வழக்கு ஆதாரம் இல்லாதது மற்றும் அவர் புதிய ரூபாய் நோட்டுகளை எப்படிப் பெற்றார் என்பதைக் கண்டறிய இயலவில்லை ஆகியவற்றைக் காரணமாகக் கூறியது.
சேகர் ரெட்டிக்கு எதிரான ரெய்டுகள் இறுதியில் பெரிதாகத் தெரியவில்லை என்றாலும், ஜெயலலிதாவின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது அவருக்கு முதலில் வழங்கப்பட்ட தற்காலிகப் பொறுப்பாக, அப்போது முதல்வர் பதவியில் இருந்த ஓ பன்னீர்செல்வம் ஆகியோரின் வாய்ப்புகளைப் பெற்றனர்.
ரெட்டியுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட அ.தி.மு.க தலைவர்களில் ஓ.பி.எஸ்-ஸும் ஒருவராக இருந்தார் என்று கூறப்படுகிறது. அவர் கைது செய்யப்படுவார் என்ற வதந்திகளுக்கு மத்தியில், ஓ.பி.எஸ் – ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே அவருக்கு விசுவாசமாக இருப்பதை ஒன்றுக்கு மேற்பட்ட முறை நிரூபித்தவர் – கட்சித் தலைமைக்கு எதிராக கிளர்ச்சி செய்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, இது அவரது நெருங்கிய தோழியான வி.கே.சசிகலாவுக்குச் மாறியது.
இருப்பினும், ஓ.பி.எஸ் சுதந்திரமாக செயல்பட்டார். மேலும், அவர் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த பிறகு, சசிகலா தனது ஆதரவாளரான எடப்பாடி பழனிசாமியை பிப்ரவரி 2017-ல் முதல்வராக நியமித்தார்.
சில மாதங்களிலேயே, சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் அ.தி.மு.க-வில் இருந்து நீக்க, இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் இணைந்தனர் – இதற்கு பா.ஜ.க உதவியது; ஆனால், ஓ.பி.எஸ் மீண்டும் இ.பி.எஸ்-ஐ விட உயர் பதவியைப் பிடிக்க முடியவில்லை. சமீபத்திய நீதிமன்றத் தீர்ப்புகள் கட்சியை முழுமையாகக் கைப்பற்றுவதை முறைப்படுத்தியுள்ளது.
பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, அ.தி.மு.க.வில் தனது செல்வாக்கைப் பயனபடுத்தி தேர்தலில் தனக்குசாதகமாக மாற்றுவதில் பெரிய வெற்றியைப் பெறவில்லை. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆளும் தி.மு.க தொடர்ந்து வலிமைமிக்க கூட்டணியாக நீடிக்கிறது. மு.க.ஸ்டாலின் தலைமையில், ஆட்சிக்கு வந்ததில் இருந்து தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. சமீப காலமாக, ஸ்டாலின் பெரியாரின் சமூக நீதி அரசியலின் மரபுக்கான தனது உரிமைகோரலைப் பயன்படுத்தி, கூட்டு எதிர்க்கட்சி முன்னணியில் தன்னை ஒரு முக்கிய பாத்திரத்திற்கு கொண்டு வர முயற்சி செய்கிறார்.
இந்தப் பின்னணியில், ஜி ஸ்கொயரில் ஏப்ரல் 24-ம் தேதி தொடங்கிய சோதனைகள் நடந்து ஒரு வாரத்திற்குப் பிறகும், வருமான்துறையின் எந்த அறிக்கையும் இதுவரை வெளியாகவில்லை.
ஜி ஸ்கொயர் நிறுவனம் அதன் செயல்பாடுகள் மற்றும் பல்வேறு நன்கொடை நடவடிக்கைகள் குறித்து ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டது. ஸ்டாலின், அவரது மகனும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது மருமகன் வி.சபரீசன் – கட்சியிலும் ஆட்சியிலும் அதிகார மையமாக உள்ள வி.சபரீசன் ஆகியோருக்கு இந்த நிறுவனத்துடன் தொடர்பு இருப்பதாக அண்ணாமலை கூறியதில் உண்மையில்லை என ஜி ஸ்கொயர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“