Coimbatore chain snatching: கோவையில் நடந்து சென்ற மூதாட்டியை, பின்தொடர்ந்த நபர் மூதாட்டியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
கோவை சின்னியம்பாளையம் பி.எல். எஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பானுமதி(68). பானுமதி நேற்று காலை 11 மணி அளவில் தனது வீட்டுக்கு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு, திரும்பி கொண்டு இருந்தார்.
அப்போது பானுமதியை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர், பானுமதி அணிந்து இருந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை பறித்துகொண்டு தப்பி ஓடினார்.
இந்தக் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதில் பானுமதி நடந்து செல்வதும், பின் தொடர்ந்து வரும் நபர் பானுமதியின் கழுத்தில் இருந்து சங்கிலியை பறித்து செல்வதும் தெளிவாக பதிவாகியுள்ளது.
இது குறித்து பானுமதி பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் பி ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“