/indian-express-tamil/media/media_files/jjBbHfS9RB6h3DUdFsHe.jpg)
மேம்பால வேலைகளை போர்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
sudden traffic jam in Coimbatore: கோவை ஆத்துப்பாலம் சந்திப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்திற்கு அடியில் சிக்கிக்கொண்ட கண்டெய்னர் லாரியால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
துடியலூரில் இருந்து கேரளா நோக்கி டீ தூள் ஏற்றிக்கொண்டு பெரிய கண்டைனர் லாரி ஒன்று ஆத்துப்பாலம் சந்திப்பு வழியே சென்று கொண்டிருந்தது.
இப்பகுதியில் நீண்ட காலமாக மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் லாரியில் இருந்த கண்டைனரின் உயரம் கட்டப்பட்டு வரும் பாலத்தின் உயரத்தின் அளவிற்கு இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக சிக்கிக் கொண்டது.
பல்வேறு முக்கிய சாலைகளை இணைக்கக்கூடிய சந்திப்பு ஆத்துப்பாலம் என்பதால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பொள்ளாச்சி நோக்கி செல்லும் சாலையிலும் பாலக்காடு நோக்கி செல்லும் சாலையிலும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதனை அடுத்து அங்கிருந்த பொதுமக்களே நெரிசலை கட்டுக்குள் கொண்டு அந்த நெரிசலில் நோயாளிகளை ஏற்றுக் கொண்டு வந்த ஆம்புலன்ஸ்களுக்கு வழிகளை சீர் செய்து கொடுத்து ஒழுங்குபடுத்தினர்.
பின்னர் வந்த போக்குவரத்து காவல் துறையினர் நெரிசலை சீர் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இப்பகுதி வழியே வந்ததால் வாகன நெரிசலால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
வழக்கமாகவே இப்பகுதி வழியே பள்ளி கல்லூரி வாகனங்கள் முகூர்த்த நாட்களில் அதிகளவு போக்குவரத்து இருப்பதால் மேம்பால வேலைகளை போர்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.