கோவை மாவட்டம் வால்பாறை தமிழக- கேரளா எல்லை வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, கரடி,காட்டு மாடு, காட்டுயானை கூட்டங்கள் அதிக அளவில் உள்ளன.
தற்போது கோடை வெயில் தாக்கத்தினால் காட்டு யானை கூட்டங்கள் நீர் நிலைகளை தேடி வருகின்றன.
தும்பிக்கை இல்லாத யானை
தமிழ்நாடு மற்றும் கேரளா வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டு யானைகள் கூட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
-
சக யானையுடன் சுற்றித் திரியும் குட்டி யானை
இந்நிலையில் யானை கூட்டத்தில் தும்பிக்கை இல்லாத ஒரு வயதான குட்டி யானை ஆற்றைக் கடக்கும் பொழுது பொதுமக்கள் பார்த்து வனத்துறையினருக்கு தெரிவித்தனர்.
அதிகாரிகள் தகவல்
மேலும் தூம்பிக்கை இல்லாத ஒரு வயது ஆன யானை யானை கூட்டத்துடன் உள்ளது எனவும் தும்பிக்கை இல்லாட்டியும் யானை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது.
மேலும், தும்பிக்கை இல்லாவிட்டாலும் நம்பிக்கையுடன் குட்டி யானை இருப்பது மிகுந்த ஆச்சரியத்திற்கு உள்ளாகி உள்ளது என வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் பி.ரஹ்மான்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/