போதையில் தள்ளாடிய அரசுப் பள்ளி மாணவன்.. வீடியோ காட்சி வைரல்

சேலத்தில் பள்ளி மாணவன் ஒருவன் போதையில் தள்ளாடும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

சேலத்தில் பள்ளி மாணவன் ஒருவன் போதையில் தள்ளாடும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

author-image
WebDesk
New Update
Two people died after consuming alcohol in Thanjavur

Puducherry

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அரசு ஆண்கள் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் மது போதையில் தள்ளாடியுள்ளார்.
சீருடையில் இருந்த அவரை சக மாணவன் மீட்டு அழைத்துச் செல்கிறார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாக பரவிவருகின்றன.

Advertisment

இந்த நிலையில் இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. கடும் போதை தலைக்கு ஏறிய நிலையில் மாணவன், தள்ளாடிக்கொண்டே சாலையில் விழுந்துள்ளார்.
இதை அங்கிருந்தவர்கள் பார்த்து, அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் திங்கள்கிழமை (டிச.12) மதியம் நடந்துள்ளது. இதற்கிடையில் மது விற்பனையில் கட்டுப்பாடு தேவை என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: