New Update
/
உதகை அருகே தூனேரி கிராமத்தில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியின் அருகே சிறுத்தை நடமாட்டம், உணவு தேடி குடியிருப்பு பகுதியில் சிறுத்தை சர்வ சாதாரணமாக உலா வரும் சிசிடிவி காட்சிகள், அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறும் முன் வனத்துறையினர் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மைக்காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் உணவு தேடி தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்புகளின் அருகே உலா வருவது தொடர் கதையாக உள்ளது.
ஊட்டியில் சிறுத்தை நடமாட்டம் #Tiger #ooty
Posted by IETamil on Saturday, June 22, 2024
அவ்வாறு குடியிருப்பு பகுதியின் அருகே உலா வரும் சிறுத்தைகள் வளர்ப்பு செல்லப்பிராணிகளை வேட்டையாடி செல்வது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் உதகை அருகே உள்ள தூனேரி கிராமத்தில் இரவு நேரம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை குடியிருப்பின் அருகே உலா வந்துள்ளது.
இந்த நிலையில் குடியிருப்பு பகுதியில் உணவு தேடி சிறுத்தை சர்வ சாதாரணமாக உலா வரும் காட்சி குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் வீட்டின் உரிமையாளர்கள் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்தபோது சிறுத்தை உலா வந்துள்ளது தெரியவந்தது. இதனால் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.