New Update
/
பொள்ளாச்சி அருகே உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் இல்லாததால் தூய்மை பணியாளர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட கோட்டூர் அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் உள் நோயாளிகளாகவும் - வெளி நோயாளிகளாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தினசரி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் கூலித் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி என்பதால் அடிக்கடி சிறு சிறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. வால்பாறையில் இருந்து வரும் நோயாளிகளுக்கு அவசர காலத்துக்கு சிகிச்சையை இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு பொள்ளாச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் கொண்டு செல்லப்படுகின்றனர்.
அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த தூய்மை பணியாளர்
தலைமை மருத்துவர் ஒருவர் இரண்டு கூடுதல் மருத்துவர்கள் ஆறு செவிலியர்கள் தூய்மை பணியாளர்கள் இந்த மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த மருத்துவமனையில் 10"க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்கின்றனர்.
மேலும் தற்போது தூய்மை பணியாளர் பெண் மருத்துவமனைக்கு வந்த நோயாளிக்கு காலில் அடிபட்டதால் சிகிச்சை அளிக்கும் வீடியோ சுற்று வட்டார பகுதிகளில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக அரசு பொதுமக்கள் மற்றும் நலனை கருத்தில் கொண்டு கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள்,தூய்மை பணியாளர்கள் மருத்துவமனைக்கு நியமிக்க வேண்டும் என காதாரத்துறை அமைச்சர் மற்றும் முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தியாளர் பி ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.