தமிழகத்தில் முதன்முறையாக பார்வையற்ற ஒருவர் சிபிஐ(எம்) கட்சியின் மாவட்டச் செயலாளராக தேர்வு!

வழக்கறிஞராக பணிபுரியும் அண்ணா, அதன் மாணவர் பிரிவான இந்திய மாணவர் கூட்டமைப்பு மூலம் கட்சியில் நுழைந்தார்.

bharathi anna
a visually challenged person has been elected as the District Secretary of the CPIM party (Photo: Facebook)

பி.எஸ். பாரதி அண்ணா, பார்வையற்ற சிபிஐ(எம்) உறுப்பினர், அக்கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் பார்வையற்ற ஒருவர் கட்சியின் மாவட்டச் செயலாளராக இருப்பது இதுவே முதல் முறை.

வழக்கறிஞராக இருக்கும் அண்ணா, சிபிஐ(எம்) மாணவர் பிரிவான இந்திய மாணவர் கூட்டமைப்பு மூலம் கட்சியில் நுழைந்தார். சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்த பிறகு, செங்கல்பட்டில் பயிற்சியைத் தொடங்கினார்.

”எனக்கு மூன்று வயது வரை பார்வை இருந்தது. பின்னர், குறுகிய பார்வை இருப்பது கண்டறியப்பட்டது 2014 இல் முழுமையாக பார்வை இல்லாமல் போனது” என அண்ணா கூறினார். இவர் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் துணைச் செயலாளராக இருந்தார். ஆனால் “ஒட்டுமொத்தமாக கண்பார்வை இழப்பு, என்னை துறையில் வேலை செய்ய விடாமல் தடுத்தது. அதனால் நான் ராஜினாமா செய்தேன்.

மேலும் மன அழுத்தமும் என்னைத் தாக்கியது. ஆனால் நவீன தொழில்நுட்பம் கைக்கொடுத்ததால், உடல் ஊனமுற்றோருக்கான பிரிவில் பணியாற்றத் தொடங்கினேன்,” என்றார்.

பாரதி அண்ணா, அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பராமரிப்பாளர்களின் உரிமைகளுக்கான தமிழ்நாடு சங்கத்தின் துணைத் தலைவராகவும் உள்ளார்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: A visually challenged person has been elected as the district secretary of the cpim party

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express