scorecardresearch

கரை ஒதுங்கிய திமிங்கலத்திற்கு உயிர் கொடுத்த காரைக்கால் மீனவர்கள்

காரைக்காலில் கரை ஒதுங்கிய திமிங்கலம் கடலுக்குள் உயிருடன் விடப்பட்டது

A whale washed ashore in Karaikal was released alive into the sea
திமிங்கலத்தை கடலுக்குள் கொண்டு சேர்க்க போராடிய மீனவர்கள்

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த வாஞ்சூர் பகுதியில் தனியார் துறைமுகம் ஒன்று உள்ளது. இதனருகில் உள்ள வாஞ்சூர் கடற்கரையில் நேற்று சுமார் 80 அடி நீளம் உள்ள நீல திமிங்கலம் கரை ஒதுங்கியது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட நிர்வாகத்துக்கு துறைமுக ஊழியர்கள் தகவல் அளித்தனர். அதன்பேரில், மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் மீன் வளத் துறையினர் அங்கு சென்று பார்த்தனர்.
பின்னர், காரைக்கால், திருப்பட்டினம், பட்டினச்சேரி கிராம மீனவர்கள் மற்றும் தனியார் துறைமுக ஊழியர்கள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர், கரை ஒதுங்கிய திமிங்கலத்திற்கு உயிர் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

காலை தொடங்கிய இந்த முயற்சி 5 மணி நேர போராட்டத்துக்குப் பின், அந்த திமிங்கலத்தை பத்திரமாக மீட்டு, கயிற்றில் கட்டி, நான்கு விசை படகுகளின் உதவியுடன் இழுத்துச் சென்று நடுக்கடலில் விட்டு அதற்கு உயிர் கொடுத்தனர்.

ஆழ்கடலில் ஆனந்தமாக நீந்தி சென்ற திமிங்கிலத்தை கண்டு, மகிழ்ச்சியுடன் மீனவர்கள் கரை திரும்பினர்.

செய்தியாளர் க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: A whale washed ashore in karaikal was released alive into the sea

Best of Express