சென்னை வள்ளலார் நகரில் இருந்து திருவேற்காடு பகுதிக்கு மகளிர் கட்டணமில்லா அரசு பேருந்து செவ்வாய்க்கிழமை (பிப்.6) காலை வழக்கம்போல புறப்பட்டது.
இந்தப் பேருந்து சென்ட்ரலை கடந்து அமைந்தகரை அருகே சென்றபோது பேருந்தின் ஓட்டை வழியே பெண் ஒருவர் தவறி சாலையில் விழுந்தார்.
அந்தப் பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த நிலையில், சக பயணிகளின் அலறல் சப்தம் கேட்டு பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார்.
அரசு பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாததால் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என சக பயணிகள் குற்றஞ்சாட்டினர். இந்த நிலையில், பணிமனை கிளை மேலாளர் உட்பட அனைவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த உத்தரவை மாநகரப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் பிறப்பித்துள்ளார். அதாவது, அதாவது, பேசின் பிரிட்ஜ் பேருந்து பணிமனையின் கிளை மேலாளர், தொழில்நுட்ப பொறியாளர் மற்றும் பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“