/indian-express-tamil/media/media_files/P5czSWujxNU0BYg5iecQ.png)
கோவையில் உள்ள கோவில் ஒன்றில் பெண்ணிடம் செல்போன் திருட்டு
கோவை மாவட்டம் அன்னூரில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு மன்னீஸ்வரர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் பிரதோஷம் உள்ளிட்ட விசேஷ தினங்கள் மட்டுமல்லாது அனைத்து தினங்களிலும் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வார்கள்.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு 24ஆம் தேதி காலை 11 மணியளவில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து பெண் ஒருவர் சாமி கும்பிட வந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர் சாமி கும்பிடுவது போல் நடித்து அந்தப்பெண் மெய்மறந்து சாமி தரிசனம் செய்திருந்த வேளையில் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரது செல்போனை லாபகமாக திருடி சென்றார்.
கோவிலில் செல்போன் திருட்டுகோவை: கோவிலில் பெண்ணிடம் செல்போன் திருட்டு #Coimbatore #Temple #cellphone #thefts
Posted by IETamil on Tuesday, February 27, 2024
இந்தக் காட்சிகள் கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இது குறித்து அப்பெண் அன்னூர் காவல் நிலையத்தில் பிப்ரவரி 26ஆம் தேதி இரவு 10 மணியளவில் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அன்னூர் காவல் ஆய்வாளர் நித்யா தலைமையிலான போலீசார் கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சிசிடிவி காட்சிகள் இன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
செய்தியாளர் பி ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.